search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பணம் பறிப்பு"

    மதுரையில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஐராவதநல்லூர் கண்மாய் அருகே தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 27) நடந்து சென்றார். அப்போது 3 பேர் திடீரென வழி மறித்தனர். அவர்கள், பிரவீன்ராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ. 7 ஆயிரத்து 400 மற்றும் ஆப்பிள் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் பிரவீன்ராஜ் புகார் செய்தார். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் பணம் பறித்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சண்முககுரு (20), ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் (20), அஜீத்குமார் (20) ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பாரிமுனையில் வாலிபரிடம் ரூ.2 லட்சம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சவுகார்பேட்டை, தங்க சாலையை சேர்ந்தவர் வசந்த். இவர் நாராயணமுதலி தெருவில் உள்ள நோட்டு புத்தகம் மொத்த விற்பனை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் கடை உரிமையாளர் முகேஷ் வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து வரும்படி ‘காசோலை’யை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.

    வசந்த் பாரிமுனை ரத்தன் சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்துக் கொண்டு திரும்பி நடந்து வந்தார்.

    கோவிந்தப்பா- ஆதியப்பா தெரு சந்திப்பில் வந்தபோது பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென வசந்தை தட்டி அழைத்தனர். அவர் திரும்பி பார்த்தபோது முன்னாள் சென்ற மற்றொரு 2 வாலிபர்கள் வசந்த் வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி ஓடிவிட்டனர்.

    வசந்தின் கவனத்தை திசை திருப்பி 4 பேர் கும்பல் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
    நெகமம் அருகே வாலிபரை மரத்தில் கட்டி வைத்து ரூ. 45 ஆயிரத்தை பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெகமம்:

    கோவை மாவட்டம் நெகமம் அடுத்துள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). இவர் அனுப்பர்பாளையத்தில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 6 -ந்தேதி இரவு மதன் குமார் பிரவுசிங் சென்டரில் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். ஆலாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்த போது காரில் வந்த 4 பேர் மதன் குமாரை வழிமறித்தனர்.

    பின்னர் அவரை அங்குள்ள மரத்தில் கட்டிப் போட்டு அடித்து உதைத்து அவரிடம் இருந்த ரூ. 54 ஆயிரத்தை பறித்தனர். பின்பு மதன்குமாரின் கட்டுகளை அவிழ்த்து விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.காயம் அடைந்த மதன்குமார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மயக்கம் தெளிந்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விசாரணையில் மதன் குமாரை மரத்தில் கட்டி வைத்து பணத்தை பறித்தது ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஹரி, பிரசாத், மடத்துக்குளம் கவின், சுந்தர கவுன்டனூர் பரத் என்பது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரத்தில் வாலிபரை மரத்தில் கட்டிப்போட்டு பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×